
சங்ககிரி வட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்
சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்கள்.
சேலம் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.
கரோனா தொற்று பணியில் மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு தமிழகரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி வட்டக்கிளையின் நிர்வாகி ரமேஷ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
இதனையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். இப்போராட்டம் ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி மூன்று நாள்கள் நடத்த உள்ளனர். ஜூன் 26ம் தேதி மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






