சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 28 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர் மீது தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

News image
தேனி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர் மீது தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். மணிகண்டன் முன்னிலை வகித்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டுகளுக்கு, விவசாயிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக இரு மாவட்ட ஆட்சியர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுமார் 20 ஆயிரம்  விவசாயிகள், தொழிலாளர்கள் சார்ந்த மக்கள்  பிரச்னையை போர்க்கால அடிப்படையில் பேசி தீர்வு காண வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 28 பேர்கள் மீது வியாழக்கிழமை கூடலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.