
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் பால் முழுவதும் ஆவின் நிர்வாகமே முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும், கறவை மாட்டுக்கடனை வட்டியில்லாமல் வழங்கிட வேண்டும், உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.
50 சதவீத மானியத்துடன் தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.