விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கல்

சாத்தான்குளம் விவகாரத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 ஜூன் 2020, 2:54 pm

DIN

சாத்தான்குளம் விவகாரத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என உத்தரவிட்டு இருந்தார்கள். அதனடிப்படையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் இன்று (26.06.2020) நேரில் சாத்தான்குளம் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள். தமிழ்நாடு முதல்வர் அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஜெயராஜ் துணைவியார் செல்வராணியிடம் வழங்கினார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து உடனுக்குடன் தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுத்து காவல்துறை மூலம் துறைரீதியாக உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முதல்வர், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்க்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.20 இலட்சம் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். 

மேலும் கல்வி தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்கள். இன்று சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆகியோரின் வீட்டிற்கு நேரடியாக சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் உத்தரவுப்படி, தலா ரூ.10 லட்சம் விதம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையினை தஜெயராஜ் துணைவியார் செல்வராணியிடம் வழங்கப்பட்டது. மேலும் கல்வி தகுதியின் அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே வழக்காக எடுத்து விசாரணை செய்து வருகிறது.

உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்று இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யும். மேலும் தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக உரிய தண்டனை கிடைக்கும் என குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.