சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

​தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :29 ஜூன் 2020, 12:49 pm

DIN


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,841 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 108 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 62 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -18) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு நோய் பாதிப்பு இல்லாமல் பலியானவர்கள் 11 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 37,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,40,441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.