சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீநிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு எதிர்மனுதாரராக உள்ள வழக்குகளில் சென்னை உயரநீதிமன்றத்தில் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரநாராயணனை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்.சங்கரநாராயணன், இந்த பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...