குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உட்பட்ட தெர்மல் நகர் அருகே உள்ள 51 வது வார்டு யூரணி ஒத்தவீடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ளவர்கள் உப்பளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீர் வழங்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் குடிப்பதற்காக ஒரு குடம் தண்ணி 15 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். தங்கள் பகுதியில் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


