
கல்வி நிறுவனத் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேரறிஞர் அண்ணா போன்ற அறிஞர்களை உருவாக்க காரணமான சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வள்ளல் பச்சையப்ப முதலியாரால் துவங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
பச்சையப்ப முதலியாரின் பிறந்தநாளான மார்ச் 31 ஆம் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.