அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தாய்லாந்தைச் சேர்ந்தவர் கோவையில் மரணம்: கரோனா காரணம் அல்ல

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :17 மார்ச் 2020, 7:36 am

DIN

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த எழு பேர் கடந்த மார்ச் 6 ம் தேதி தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த சனிக்கிழமை ஈரோட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் 45 வயது மதிக்கதக்க ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் சொந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு சனிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்துள்ளார். 

கோவை விமான நிலை மருத்துவக் குழு  மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இவரது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா ஆய்வுக்காக சென்னை கிங்ஸ் ஆய்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் திங்கள் கிழமை பெறப்பட்டது, அதில் கரோனா வைரஸ் பாதிப்பு  இல்லை என வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். 

அவரின் இறப்புக்கு சிறுநீரக செயலிழப்பே காரணம் என்று சுகாதாரதத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.