தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி இது குறித்து விவரம் கேட்டுள்ளோம். இதற்கு ஏற்கனவே ரயில்வே துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில், 30.05.2020க்குள் ரயில்வே துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தற்போது 10.09.2019 அன்று இந்த பணிக்குரிய ஆணையைச் சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது. எனவே உடனடியாக ஐசிஎப் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படுமா? அல்லது ஏற்கனவே நிர்ணயித்த தொகையில் அந்த பணியை மேற்கொள்ள ஐசிஎப் நிறுவனம் அனுமதித்துள்ளதா என்பது குறித்த அந்த முடிவை எடுக்க வேண்டும். அன்றாடம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெரிசல் மற்றும் சங்கடங்களைக் களைவதற்கு, இந்த ஆண்டிற்குள்ளாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து, பாலம் கட்டும் பணியை நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் என்று அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.