6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10 அடிக்கு ஒருவர், வாடிக்கையாளர் நலனில் டாஸ்மாக் அக்கறை!

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

News image
Updated On :20 மார்ச் 2020, 12:33 pm

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஜவுளி கடைகள், நகைக் கடைகள், மதுபான பார்கள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை அடைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

Story image

மார்ச் 22ம் தேதி 'மக்கள்-ஊரடங்கு' என்ற முறையில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம், வெளியிடங்களுக்கு வருவோர் சமூக இடைவெளியை விட்டு இருப்பது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல், போதிய இடைவெளி விட்டு வரிசையில் நின்று மதுபானம் வாங்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

Story image

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள  அரசு மதுபானக் கடையில் பொதுமக்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

அதனை மிகச் சரியாக பின்பற்றி மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.