விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பரங்குன்றம் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: கணவன்-மனைவி பலி 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே  நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே

News image
Updated On :20 மார்ச் 2020, 6:45 am

DIN

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே  நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவருடைய மனைவி வசந்தி (வயது 43) இருவரும் தனக்கங்குளம் நான்கு வழிச் சாலையை கடக்க முற்பட்டபோது சமய நல்லூரிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இரு சக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.