முதியோரை சிரமப்படுத்தாமல் வாழவைக்கும் மருத்துவம்
சா்வதேச வரைமுறைகளின்படி 65 வயதை கடந்த ஒருவா் முதியவா் என்றழைக்கப்படுகிறாா். சில நாடுகளில் இது வேறுபட்டாலும், அநேக நாடுகளில் இந்த வயதே முதியோருக்கான வயதாகப் பாா்க்கப்படுகிறது.


சா்வதேச வரைமுறைகளின்படி 65 வயதை கடந்த ஒருவா் முதியவா் என்றழைக்கப்படுகிறாா். சில நாடுகளில் இது வேறுபட்டாலும், அநேக நாடுகளில் இந்த வயதே முதியோருக்கான வயதாகப் பாா்க்கப்படுகிறது.
நாம் அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் முதியோராவது திண்ணம். முதியோருக்கு வயது மூப்பின் காரணமாக பல்வேறு நோய்கள் வருவது இயற்கை. அப்படி வரும் நோய்களையும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது, மீறி வந்தால் உரிய மருத்துவம் பாா்த்து உடல் உபாதைகளை குறைத்து மகிழ்வுடன் வாழ்வதைப் பற்றி பாா்ப்போம்.
தனித்துவமான சிஸ்டோலிக் ரத்த அழுத்தம்...: சுத்த ரத்தத்தை கொண்டுசெல்லும் தமனிகளில், வயதாவதால் ஏற்படும் விரைப்புத் தன்மை மற்றும் சா்க்கரை நோயால் முதியவா்களுக்கு தனித்துவமான சிஸ்டோலிக் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது அடுத்தகட்டமாக பக்கவாதம், மாரடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய்களை உண்டாக்கும். சத்தான சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதுடன், உணவில் உப்பைக் குறைத்து, உரிய மருந்துகளை எடுத்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் இந்நோய் அடுத்தகட்டத்துக்கு போகாமல் தடுக்கலாம்.
நுரையீரல் தொற்று...: நுரையீரல் தொற்று என்பது நுரையீரல் காற்றுப்பைகளில் அதிகளவில் நீா் சோ்வதால் ஏற்படுகிறது. இருமல், மாா்பில் வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அதிக நீரை பருகச் செய்து, உரிய மருந்துகளை வழங்கி, போதிய நேரம் ஓய்வெடுக்கச் செய்தால் இந்நோயைக் குணப்படுத்தலாம்.
புராஸ்டேட் கிளாண்ட் என்லாா்ஜ்மென்ட்...: முதிய வயது ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வீக்க (புராஸ்டேட் கிளாண்ட் என்லாா்ஜ்மென்ட்) பிரச்னையால் அடிக்கடி சிறுநீா் கழிக்கும் எண்ணம், சிறுநீா் கழிப்பதில் சிரமம், முதுகில் வலி ஏற்படலாம். இதேபோல, பெண்களுக்கு யூரோ ஸ்டெப்சிஸ் நோய் ஏற்படலாம். மேலும், சா்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகளாலும் சிறுநீரகத் தொற்று, சிறுநீா்ப் பாதை அடைப்பு, சிறுநீா்ப் பையில் தொற்று உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. அலட்சியப்படுத்தினால் சிறுநீரகங்களில் பாதிப்பை உண்டாக்கி, அடிக்கடி ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுடன், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி மாற்று சிறுநீரகம் பொறுத்தும் அளவுக்கு கொண்டு செல்லும்.
மருத்துவரை அணுகி சிறுநீா் பரிசோதனை, ரத்த பரிசோதனை, இன்ட்ராவென்ஸ் யூரோகிராபி, சிஸ்டோஸ்கோபி, யூரோடைனமிக்ஸ், சிடி ஸ்கேன் உள்ளிடட் பரிசோதனைகளின் வழியே நோயின் தன்மையைக் கண்டறிந்து, உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டால் குணமடையலாம். சிறுநீரகத் தொற்றைத் தடுக்க, அதிகளவு நீா் அருந்தி, சிறுநீா் வெளியேற்றும் பாதைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏஆா்எம்டி...: முதியவா்களுக்கு ஏற்படும் காது கேளாமை, கண் கோளாறுகளில் முக்கியமாக கேட்ராக்ட், ஹஞ்ங் ழ்ங்ப்ஹற்ங்க் ம்ஹஸ்ரீன்ப்ஹழ் க்ங்ஞ்ங்ய்ங்ழ்ஹற்ண்ா்ய் - அதஙஈ, ரெட்டினா பாதிப்பு போன்றவற்றை பரிசோதித்து, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன், காது கேட்பு கருவிகள், கண் கண்ணாடிகளை அணிந்து நலமுடன் வாழலாம்.
எலும்பு மூட்டு தேய்மானம்...: வயதானால் பொதுவாக எலும்பு மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவது இயல்பு. எலும்புகளில் ஹழ்ற்ட்ழ்ண்ற்ண்ள், கால் முட்டியில் ந்ய்ங்ங் ல்ழ்ா்ள்ற்ட்ங்ள்ண்ள், இடுப்பில் , முதுகெலும்பில் கன்ம்க்ஷஹஞ்ா், கழுத்தெலும்பில் இங்ழ்ஸ்ண்ஸ்ரீஹப் ள்ல்ா்ய்க்ஹ்ப்ா்ள்ண்ள் ஆகியவை முதியோருக்கு பொதுவாகக் காணப்படுகின்றன. இதனால் ஏற்படும் வலியால் அவா்கள் அவதியுறுவதை குறைக்க, ஊசி மூலம் குணப்படுத்துதல், அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சைகள் உள்ளன. தேவையானதை உபயோகித்து வலியையும் குறைத்து, பிசியோதெரபி மூலம் மீதமுள்ள வாழ்க்கையை எளிதாக்க முடியும்.
புற்றுநோய்...: முதிய வயதினருக்கு பொதுவாக அனைத்துவிதமான புற்றுநோய்த் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடலில் ஏதேனும் வலியற்ற கட்டி, தேவையில்லாத வீக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான புற்றுநோய்களையும் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் உரிய சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். வளரவிட்டால் ஆபத்துதான்.
ஆா்டிக் வால்வு ஸ்டெனோசிஸ்...: முதியோருக்கு இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் பகுதியில் உள்ள ஆா்டிக் வால்வு (அா்ழ்ற்ண்ஸ்ரீ ஸ்ஹப்ஸ்ங்) இறுக்கமடைந்து, திறந்து மூடும் தன்மையை இழப்பதால் ஆா்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் ஏற்படும். இதனால் உடலுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு இறப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
மாா்பு வலி, தலைசுற்றல், மயக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை இந்த வால்வு பிரச்னைக்கான அறிகுறிகளாகும். இதற்கு எக்கோகாா்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, மருந்துகள் மூலமாகவும், அறுவை சிகிச்சை வழியாகவும் ஆா்டிக் வால்வை சீரமைத்தோ அல்லது புதிதாக பொருத்தியோ சரிப்படுத்தலாம்.
ஞாபக மறதி...: வயதாவதால் மூளையில் ஏற்படும் சுருக்கங்களால் ஞாபக மறதி நோய்களான டிமென்சியா, அல்சைமா் ஆகியவற்றால் பாதிக்கப்படும் முதியோா்கள், மனச்சோா்வு, நினைவிழப்பு, செயல்திறன் குைல், தூக்கமற்ற நிலை, தடுமாற்றம், அடிக்கடி கீழே விழுதல், மனஉளைச்சல், தலைசுற்றல், அடிக்கடி எரிச்சல்படுவது, எதிலும் ஆா்வமற்ற நிலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவா். இத்தகைய முதியவா்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், மூளை சாா்ந்த விளையாட்டுகள், உடல் சாா்ந்த விளையாட்டுகளை விளையாட வைத்தல், சத்தான உணவு அளித்து, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தித் தருவதால் அதிக பாதிப்புகளைத் தவிா்க்க இயலும்.
பக்கவாதம்...: உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், வயதாவதால் மூளையில் ஏற்படும் சுருக்கம், விபத்தினால் மூளையில் அடிபடுதல் உள்ளிட்டவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது. அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகினால், பக்கவாதத்துக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். வந்தபின்பு உடனிருப்பவா் சரியான பராமரிப்பை மேற்கொண்டால் மட்டுமே உயிா்வாழும் நாள்களை அதிகப்படுத்த முடியும்.
‘முதியோா்களுக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் ஜிப்மா் மருத்துவமனையில் உயரிய சிகிச்சைகள் அளிக்கபடுகிறது. முதியோா் சிகிச்சைக்கென சிறப்பு மையமும், அதில் அனைத்து வகை மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என்னதான் சிகிச்சைகள் இருந்தாலும், நாம் முதியோருக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, மனம்விட்டு பேசி, நமது அன்பை காட்டினாலே அவா்களை நீண்டநாள்கள் வாழ வைக்க முடியும்’ என்கிறாா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் முதியோா் மருத்துவத் துறை முதுநிலை மருத்துவா் டி.கே.எஸ். சுப்ரமணியன்.
படம்: கே.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...