கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் கடைகள் அடைப்பு: வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்

சுய ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் கடைகள் முழுமையாக அடைக் கப்பட்டன.

News image
Updated On :22 மார்ச் 2020, 5:10 am

DIN

ஈரோடு: சுய ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் கடைகள் முழுமையாக அடைக் கப்பட்டன.

பொதுமக்கள் விட்டிற்குள் முடங்கியதால் முக்கியச் சாலைகள் வெறிச்சோடின. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் கரோனா வைரஸில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சியின் சோதனையாக இது அமையும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.  இந்த அழைப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்,  அமைப்பினர்,  வணிகர்கள் பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இன்று காலை  முதல் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர்.  ஈரோட்டில் இன்று  870 அரசு மற்றும் 269 தனியார் பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் , 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வாடகை கார்கள் முற்றிலும் ஓடவில்லை.  

மேலும் காய்கறி கடைகள் மருந்து கடைகள்,  பெரிய சந்தைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பூங்கா, மேட்டூர் சாலை, ஆர்கே வி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஈ.வி .என். சாலை,  பெருந்துறை சாலை,  சத்தி சாலை,  ஈரோடு பேருந்து  நிலையம்,ரயில் நிலையம் உட்பட அனைத்து பகுதியில் உள்ள ஹோட்டல்கள் ,கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.  காலையில் ஒரு சில டீ கடைகள் மட்டும் திறந்து இருந்தன.  அதே போன்று ஒருசில இறைச்சிக் கடைகளும் திறந்து இருத்தன.  ஆனால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. 7 மணிக்கு பிறகு இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டன.
 

ஈரோடு மாவட்டத்தில் 197 மதுக்கடைகள் உள்ளன.  இதில் 105 மதுக்கடைகள் பார் உடன் கூடியவை ஆகும் இவை ஏற்கனவே 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  அது போக மீதி உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.  பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன ஆனால் குறைந்த அளவே ஊழியர்கள் பணியில் இருந்தனர்.  மருந்துக்கடைகள் ,ஆவின் பால் நிலையங்கள்வழக்கம் போல் செயல்பட்டன. இன்று    முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே திருமண நிகழ்ச்சிகளை ஒரு சிலர் ஒத்தி வைத்து விட்டனர்.  ஒரு சில இடங்களில் அதிகாலையிலேயே திருமணம் நடந்துமுடிந்தது.  நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி சோப்பு போட்டு கையைக் கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.  முக்கியமான ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.  ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தனர். வீட்டுக்குள்ளிருந்து தொலைக்காட்சி பார்ப்பது செல்லிடபேசியில் விளையாடுவது,  இணைய தளத்தை பயன்படுத்துவது,  புத்தகங்களைப் படிப்பது என நேரத்தை செலவிட்டனர். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் ஒரு சில இடங்களில்  அம்மா உணவகங்கள் செயல்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கிளாத் மெர்சண்ட்ஸ்  அசோசியேஷன் சார்பில் இன்று முதல் 2500 க்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகள் ,குடோன்கள்  வரும் 31ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 கோடிக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.