அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கரோனா தடுப்பு பணி: மருத்துவக் கருவிகள் வாங்க அன்புமணி ரூ.3 கோடி நிதி உதவி

கரோனா தடுப்பு பணி, மருத்துவக் கருவிகள் வாங்க முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:16 pm

DIN

கரோனா தடுப்பு பணி, மருத்துவக் கருவிகள் வாங்க முதல்கட்டமாக ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும்,  கொரோனா வைரஸ் நோயின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களை தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயை சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.

காரோனா வைரசால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர்கள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள், கொரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators) முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.

தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.