தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: ராமதாஸ் வரவேற்பு

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: ராமதாஸ் வரவேற்பு

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பது பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Published on

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ராமதாஸ் தனது டிவிட்டரில், கரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு்ள்ள நிலையில், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாது. இதுவே கடைசி நீட்டிப்பாக அமைய வேண்டுமானால், அனைவரும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை மதித்து நடக்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com