ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு சென்று வந்த 7 பேர் தனிமைப்படுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோயமேடு மார்க்கெட்டிற்கு கேரட் கொண்டு சென்ற 5 லாரிகள் மீண்டும் குன்னூர் வந்தபோது லாரியில் இருந்த

News image
Updated On :3 மே 2020, 1:15 pm

DIN

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு சென்னையில் மட்டும் சனிக்கிழமை வரை 1,257 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 88 போ் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்ததால் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

தொடா்ந்து, கடலூா், விழுப்புரம், அரியலூா் மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு சென்று வந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு மாா்க்கெட்டுக்குச் சென்று வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோயமேடு மார்க்கெட்டிற்கு கேரட் கொண்டு சென்ற 5 லாரிகள் மீண்டும் குன்னூர் வந்தபோது லாரியில் இருந்த 7 பேர் 108 வாகனம் மூலம் குன்னூர் லாலி மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்காக தணிமைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறை மூலம் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து வரும் அனைத்து லாரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.