ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மக்களுக்காக இரவு-பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கியமாக சென்னையில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது.
மேலும், பல வகைகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா வைரஸ் குறித்தும், ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் அரிய பணி குறித்து விளக்கும் வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை காவல்துறை ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை எழுதி இயக்கியுள்ளார், திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்தின் முதல் உதவி இயக்குநர் ககா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

