ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணுக்குக் கரோனா தொற்று 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்னையிலிருந்து வந்த இளம் பெண்ணுக்குக் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :7 மே 2020, 1:21 pm

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்னையிலிருந்து வந்த இளம் பெண்ணுக்குக் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பெண் வசிக்கும் வீடு மற்றும் வீதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், அப்பெண்ணும் மதுரை ராசாசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப் பட்டார்.

விருதுநகர் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் குறித்து சுகாதாரத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து, அவர்களை அடையாளம் கண்டு உரிய பரிசோதனைகள் மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் பணிபுரியும் 33 வயது கணினிப் பொறியாளர் ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி, குழந்தைகள், தாய் தந்தையர் உள்ளிட்ட மொத்தம் 7 பேருடன் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு இம்மாதம் 1ம் தேதி வந்திருந்தாராம். 

உடனடியாக அவர்கள் குறித்தத் தகவல் பெறப்பட்டு சுகாதாரத் துறையினர் சார்பில் அக்குடும்பத்தினர் 7 பேருக்கும் தொற்றுப் பரிசோதனை செய்தனர். இதில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், பொறியாளரின் 29 வயது மனைவிக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தொற்று பாதிக்கப்பட்ட அப்பெண் மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும் சொக்கலிங்கபுரம் பகுதியில் அப்பெண் வசிக்கும் வீடு மற்றும் வீதி உள்ள உஜ்ஜி சாமி கோவில் சுற்று வட்டப் பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை நிலவரப்படி நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 35 ஆகவும், நோய் குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 13 ஆகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது நோய்த் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 35 லிருந்து 36 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.