லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காரைக்குடி பகுதியை குளிர்வித்த கோடை மழை 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.  

News image
Updated On :7 மே 2020, 12:51 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை மதியம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது.                

நகரில் கோடை கால வெயில் கொளுத்தி வருகிறது.கடந்த சில இரண்டு தினங்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடும் வெயிலால் நகரில் வெப்பம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.                   

இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் வானம் மந்த நிலையாகவும், கடும் வெயிலும் என மாறி மாறி இருந்த நிலையில் கருமேகம் திரண்டு மதியம் 2.30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் பூமியில் லேசான ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது. 

ஒரு சில பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இடி இடிந்த வாறு இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.