கரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதைக் கண்டித்து திருநகரில் பெண்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மக்கள் பாதை மகளிர் பிரிவு சார்பில் திருநகர் முதலாவது பேருந்து நிறுத்தம் பகுதியருகே உள்ள அரசு மதுபானக் கடையில் இரண்டு பெண்கள் விலைகொடுத்து மதுபானத்தை வாங்கி அதனை சாக்கடையில் கொட்டினர். இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த ஜோதி என்பவர் கூறியது: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.
கடந்த 40 நாள்களில் மதுக்கடைகள் இல்லாததால் பெண்கள் நிம்மதியாக இருந்தனர். மதுபானம் என்பது சாக்கடை தண்ணீருக்கு நிகரானது. அதனை நிரூபிக்கவே மதுபானத்தை சாக்கடையில் ஊற்றியுள்ளோம். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும் கரோனாவிற்கு சாப்பிடக்கூடிய மருந்தை மதுபானம் அருந்துவோர் சாப்பிட்டால் அதிக பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு கரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறந்தது தவறானது உடனடியாக அடைக்க வேண்டும் என்றார். போராட்டத்தில் அமுதா, ஜெகதீஸ்வரி, மக்கள் பாதை ருங்கிணைப்பாளர் அருண் அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


