ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கரோனா - வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் வீடு திரும்பினர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் முழுமையாக குணமடைந்ததை

News image
Updated On :8 மே 2020, 12:32 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் முழுமையாக குணமடைந்ததை அடுத்து அவர்கள் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாணியம்பாடி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினர் 23 பேருக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏப்ரல் 23}ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அவர் பூரண குணமடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவருடன் அதே மருத்துமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இருவரும் குணமடைந்துள்ளதை அடுத்த அவர்களுடன் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். முன்னதாக, குணமடைந்த இம்மூன்று பேருக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.செல்வி உள்ளிட்ட மருத்துவர்கள் கரவொலி எழுப்பியும், கனிகள் வழங்கியும் வழியனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்மூலம், வேலூர் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றவர்கள் என இதுவரை 72 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.