
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆதனூர் மற்றும் மளவராயநத்தம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பூரணமாகக் குணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்துகொண்டு இருவருக்கும் பழம் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.