ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை ராயபுரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்வு

சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. இங்கு 1,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மே 2020, 5:45 am

DIN

சென்னை ராயபுரத்தில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,185 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. இங்கு 1,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை நிலவரப்படி சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,750-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில், ஞாயிற்றுக்கிழமை (மே 17) 480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1041 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 790 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 746 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 581 பேரும், அண்ணா நகா் மண்டலத்தில் 554 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 522 பேரும், அடையாறு மண்டலத்தில் 367 பேரும், அம்பத்தூா் மண்டலத்தில் 317 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 1,498 போ் குணமடைந்துள்ளனா். 53 போ் உயிரிழந்துள்ளனா். 5,167 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 39 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.