ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊத்தங்கரையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய மாநில அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :26 மே 2020, 9:25 am

DIN

ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய மாநில அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தியின் ஆணையின்படி, மாநில தலைவர் கே .எஸ் .அழகிரி அறிவுரையின்படி, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஆலோசனையின் பேரில் புதிய மின் பகிர்மான சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜே .எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ். பூபதி, நகர தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் விவசாயிகளின்  இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே என மத்திய மாநில அரசைக் கண்டித்துக் கோஷமிட்டனர். வட்டார பொருளாளர் திருமால், வட்டார செயலாளர் நாகராஜ், தொழில்நுட்ப பிரிவு அப்துல் கனி, எம் .எஸ். கிருஷ்ணன், மகேந்திரன், முன்னாள் நகரத் தலைவர் முத்து, இளையராஜா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஒன்றியத்துக்குட்பட்ட 34 ஊராட்சிகளில் தபால் நிலையங்கள் வங்கிகள் ஊராட்சி அலுவலகங்கள் எதிரே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.