ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம்: உயர் நீதிமன்றம் பரிந்துரை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

News image
Updated On :27 மே 2020, 6:47 am

DIN


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கிலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் ஆகியோா் தாக்கல் செய்திருந்த வழக்கிலும் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில்  நீதிபதிகள் என். கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் புதன்கிழமை பிறப்பித்த தீர்ப்பில், போயஸ் தோட்டத்து இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றி விட்டு எஞ்சிய பகுதிகளை  முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொண்டு அறக்கட்டளை அமைக்க வேண்டும்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Story image

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மற்றும் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை விட தமிழக முதல்வர் அலுவலகம் மற்றும் முதல்வர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் வரிப் பணத்தில் தனியார் சொத்துக்களை வாங்க திட்டமிட்டால், அது முடிவில்லால் சென்று கொண்டே இருக்கும். எனவே, வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம், மற்ற பகுதியை முதல்வரின் அலுவலகம் மற்றும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபாவை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து 8 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை நிா்வகிக்க, தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கில், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனா். மேலும், ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.