விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக்- சென்னை உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :29 மே 2020, 10:40 am

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகளை நிா்வகிக்க, தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கில், எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனா். மேலும், ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி, செல்வ வரி பாக்கித் தொகைக்காக அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் கொண்ட அமா்வு புதன்கிழமை (மே 27) தீா்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மற்றும் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை விட தமிழக முதல்வர் அலுவலகம் மற்றும் முதல்வர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபாவை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.