கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் மதுரை கொண்டு செல்லப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட  தங்கக் கவசம் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரையில் உள்ள வங்கிக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டு 13.5 கிலோ எடை அளவில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து தேவர் சிலை தங்கக் கவசத்தை வழங்கினார்.

Story image

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட இந்த தங்கக் கவசம் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு குருபூஜை விழாவிற்கு முன்பாக காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பின்னர் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்படும்.

இந்த ஆண்டு கடந்த மாதம் அக். 28,29,30 ஆகிய நாள்களில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் 58வது குருபூஜை விழா, 113வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக மதுரை வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த தங்கக் கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்.23 ம் தேதி தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து ஒப்படைத்தார்.

குருபூஜை விழா நிறைவு பெற்றதையடுத்து இன்று துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இருந்து தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் அம்மாள்,  தங்கவேலு ஆகியோர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.