தமிழகத்தில் இன்று புதிதாக 2,370 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இன்று மட்டும் 80,786 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2,370 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 612 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,39,147ஆக உயர்ந்துள்ளது.
மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2402 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து8,946-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 19,002 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 21 போ் அரசு மருத்துவமனைகளிலும், 6 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,299-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஹாட்ரிக் அடிக்குமா திமுக!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


