சரவெடிகளை தவிர்க்கலாம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
சரவெடிகளை வெடிக்காதீர்கள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
சரவெடிகளை வெடிக்காதீர்கள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், 

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாம்.. கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டியவை

1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3.குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம். உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும். மாசில்லா தீபாவளி கொண்டாடுவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com