வாழப்பாடியில் தீபாவளி கொண்டாட்டம் அமோகம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் உண்டும், தீபாவளி பண்டிகையை மக்கள் ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் உண்டும், தீபாவளி பண்டிகையை மக்கள் ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜவுளிகள், இனிப்பு கார வகைகள், பட்டாசுகள் விற்றுத்தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரோனா தொற்று பரவலால் கடந்த 7 மாதங்களாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டதோடு, கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்களும் மூடப்பட்டது. இதனால் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தனர்.
இந்நிலையில், 7 மாதங்களுக்குப் பிறகு தீபாவளி பண்டிகை வந்ததால், கரோனா தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல், வாழப்பாடி பகுதி கிராமப்புற பொதுமக்கள் குதுகலம் அடைந்தனர்.
பொருளாதாரப் பிரச்சினையை தள்ளிவைத்துவிட்டு, புத்தாடை எடுத்து அணிந்துகொண்டு, பட்டாசுகள் வாங்கி வெடித்து, இனிப்பு உண்டும், அசைவ உணவுகள் சமைத்து நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் விருந்து வைத்தும் அன்பை பகிர்ந்து தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாழப்பாடி பகுதியில் கிராமப்புற கோவில்களில் பொதுமக்கள் சென்று வழிபாடு நடத்தினர். வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கடைகளில் இனிப்பு வகைகள், ஜவுளி கடையில் துணிகள், பட்டாசுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீபாவளி பண்டிகையை வந்ததால், மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடு கொண்டாடி மகிழ்ந்து குதுகலித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
வாழப்பாடி கணபதி நகர் காந்திமதி செல்வராஜ் கூறியதாவது: கரோனா தொற்று பரவலால், கடந்த 7 மாதங்களாக எந்த பண்டிகையும் கொண்டாடவில்லை. எந்த விழாக்களில் பங்கேற்க முடியவில்லை.
வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். தற்போது, கரோனாத் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை வந்ததால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புத்தாடை எடுத்து, பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி, தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிந்தோம். மனஅழுத்தம் குறைந்து மனநிறைவும்,. நிம்மதியும் கிடைத்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...