தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுவோரை விட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 16,441 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாக 2,520 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,27,752-ல் இருந்து 7,30,272-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என 12 பேர் பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,478 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 64,213 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,07,91,896-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 502 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 28-வது நாளாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பழனிசாமியின் ஓனர் பாஜகதான்!” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


