
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று சண்முகர் சன்னதி உள்ள சண்முகர் வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை கோவில் ஸ்தானிகர் பட்டர்கள் காப்பு கட்டினர்.
முன்னதாக சண்முகர் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பால், பன்னீர் மற்றும் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக 19 ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனம் நடைபெறும்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கந்தசஷ்டி விழா தொடா்பான அனைத்து உற்சவ நிகழ்வுகளும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் திருக்கோவிலுக்குள் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கந்த சஷ்டி விழாவிற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் இருப்பார்கள். இந்த ஆண்டு கரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.