தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 நவம்பர் 2020, 11:42 am

DIN

தமிழகத்தில் புதுக்கோட்டை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

தூத்துக்குடி 17 செ.மீ மழையும், பாபநாசம் 14 செ.மீ மழையும், வந்தவாசி 11 செ.மீ மழையும், திருபுவனம் 10 செ.மீ மழையும், மதுராந்தகம், மைலாடி தலா 9 செ.மீ மழையும், கொட்டாரம், உத்திரமேரூர் தலா 8 செ.மீ மழையும், பாளையம்கோட்டை, ராஜபாளையம், கோவில்பட்டி தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.