சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி

வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

News image
வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான மினி வேன்.
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ராணிபேட்டை மாவட்டம், ஆற்காட்டு பகுதியில் இருந்து மினி வேன் ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி இரவு சென்று கொண்டு இருந்தது. அதில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பயணம் செய்தனர். சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் எதிரே வந்துகொண்டு இருந்தனர். நெக்குந்தி என்ற இடத்தில்  மினி வேன் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணம் செய்த செய்யாறு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(32) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். வேன் டிரைவர் சேகர்(45) மற்றும் முருகன்(33)  படுகாயம் அடைந்தனர்.

Story image

மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த  தினேஷ்(26), நடுப்பட்டறை கிராமத்தை சேர்ந்த  ஆகாஷ்(20), பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர்(26) ஆகியோர் பலத்தகாயங்களுடன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகாஷ் மற்றும் சங்கர் உயிரிந்தனர்.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுக்கா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.