தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதுரை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் மதுரை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருசாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
20.11.2020 மற்றும் 21.11.2020 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
ஒட்டப்பிடாரம் 12 செ.மீ மழையும், குன்னூர் 9 செ.மீ மழையும், கூடலூர், ஸ்ரீவைகுண்டம் தலா 8 செ.மீ மழையும், பிளவக்கல், சாம்ராஜ் எஸ்டேட் தலா 7 செ.மீ மழையும், மணியாச்சி 6 செ.மீ மழையும், ஒட்டாஞ்சத்திரம், புதுக்கோட்டை, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், காயல்பட்டினம், கொடநாடு தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...