மதுரை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 56 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மதுரை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.


மதுரை: துபையிலிருந்து இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 56 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மதுரை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து ஏா் இந்தியா விமானம் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சுங்க அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படியான பயணிகள் 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அவர்களது உடைமைகளில் களிமண் கட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 58 ஆயிரத்து 647 மதிப்புடைய தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அவா்கள் இருவரையும் சுங்க துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...