துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அரசு ஆம்புலன்ஸ்களில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்த வேண்டும்: நீதிமன்றம்

அரசு ஆம்புலன்ஸ்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

News image
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :19 நவம்பர் 2020, 8:32 am

DIN

அரசு ஆம்புலன்ஸ்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருப்பதை உறுதி செய்யக்கோரி அப்துல் ரகுமான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் வான்வழி ஆம்புலன்ஸை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என்றும்,  இல்லையெனில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி எப்போது ஏற்படுத்தப்படும்? எனவும் கேள்வி எழுப்பியது.

மேலும், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கமிஷனுக்காக உயிருக்கு போராடும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

மிகச்சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தனியார் மருத்துவமனையோடு தொடர்பு வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

இதனால் அரசு ஆம்புலன்ஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.