அரசுப்பள்ளி மாணவியின் மருத்துவப்படிப்பு கல்விக் கட்டணத்தை ஏற்ற சங்ககிரி எம்.எல்.ஏ.
அரசு அறிவித்துள்ள உள்இட ஒதுக்கீடு பெற்ற மாணவியின் மருத்துவப்படிப்புக்கான கல்விக் கட்டணத்தை முழுவதுமாக சங்ககிரி எம்.எல்.ஏ. ஏற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் அரசு உள் இட ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்ற மருத்துவப் படிப்புக்கான ஆணையை காண்பித்து வாழ்த்துப் பெறுகிறார் மகுடஞ்சாவடி அ.புதூர் அரசுப்பள்ளி மாணவி எம்.லதா.









