தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ்

​2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 நவம்பர் 2020, 12:10 pm

DIN


2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக - பாஜகவின் வெற்றிக் கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா முன்னிலையில் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி இனிவரும் தேர்தல்களிலும் தொடரும் என்று தெரிவித்தார்.

வேல் யாத்திரை போன்ற விவகாரங்களில் அதிமுக, பாஜக இடையே முரண்பாடு இருந்து வந்த நிலையில், பேரவைத் தேர்தலில் கூட்டணி நிலைமை குறித்த கேள்விகள் இருந்து வந்தன. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.