வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு 'நிவர்' என பெயர் சூட்டப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாகவும் மாறி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வருகிற நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24, 25 தேதிகளில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு 'நிவர்' என பெயர் சூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24, 25ம் தேதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

மூலப் பொருள்கள் தட்டுப்பாடு: அபாயத்தில் தீப்பெட்டித் தொழில்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

