அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அதிதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்

சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

News image
அதிதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்
Updated On :25 நவம்பர் 2020, 11:24 am

DIN


சென்னை: சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.

தென்மேற்கு வங்கக் கடலில், கடலூரிலிருந்து 90 கி.மீ. தொலைவில் நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதுவரை மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த தீவிர நிவர் புயலானது, தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு அதிதீவிர புயல் நிவர் கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும், சில வேளையில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.