பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,856-க்கு விற்பனை

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,856-க்கு விற்பனை
Updated On :26 நவம்பர் 2020, 6:22 am

DIN

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.36,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்தொட்டது. அதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் விலை, கடந்த 3 நாள்களாக குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ரூ.36,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.7 குறைந்து, ரூ.4,607 ஆகவும், ஒரு சவரன் ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, ரூ.65.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.65,000 ஆகவும் உள்ளது

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,607

1 சவரன் தங்கம்............................... 36,856

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி............................. 65,000

புதன்கிழமை விலை நிலவம்

1 கிராம் தங்கம்............................. 4,614

1 பவுன் தங்கம்...............................36,912

1 கிராம் வெள்ளி.............................64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.