ஆம்பூர் அருகே வயல்வெளிக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராம வயல்வெளிக்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது. 
ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராம வயல்வெளிக்குள் பிடிப்பட்ட மலைப்பாம்பு.
ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராம வயல்வெளிக்குள் பிடிப்பட்ட மலைப்பாம்பு.



ஆம்பூர்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராம வயல்வெளிக்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது. 

ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்  முருகையன் (50). இவர் தனது நிலத்தில் தக்காளி,  கத்திரிக்காய் மற்றும் மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை காலை முருகையன் குடும்பத்தினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு கூச்சலிட்டனர். உடனடியாக ஆம்பூர் வனசரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த வனத்துறையைச் சேர்ந்த வனக் காப்பாளர்கள் ராஜ்குமார், ஞானவேல் ஆகியோர் இளைஞர்களுடன் சேர்ந்து 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர், பிடிபட்ட அந்த மலைப்பாம்பை மிட்டாளம் தெற்கு வனப்பிரிவிலுள்ள மாலைக்குட்டை வனப்பகுதிக்குள் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com