கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் ஆர்பாட்டம்
Updated On :29 நவம்பர் 2020, 7:38 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமை பதிவேடு பணிகள் துவங்குவதை கைவிட வேண்டும், சிறுபான்மை உரிமைகளுக்காக போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எனக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.அக்பர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜன், வாவேர்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் எம்.பி.எம். பக்ரூதீன், திமுக செயலாளர் துரை. நெப்போலியன், காங்கிரஸ் தலைவர் போஸ், மதிமுக செயலாளர் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் எம்.வி.கல்யாண சுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.