அரசியல் பிரவேசம்: மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை
அரசியல் பிரவேசம் குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையை தொடங்கினார்.


அரசியல் பிரவேசம் குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையை தொடங்கினார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளா்கள் 38 போ் இதில் பங்கேற்றுள்ளனா். கட்சி உதயம், சட்டப்பேரவையில் தனது நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ரஜினி ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.
அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்பவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ரஜினி மக்கள் மன்றத் தலைவா் சுதாகரை போயஸ் தோட்டம் இல்லத்துக்கு வரவழைத்த ரஜினி, இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தினாா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...