எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக திண்டுக்கல் லியோனி நியமனம்

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News image
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக திண்டுக்கல் லியோனி நியமனம்
Updated On :1 அக்டோபர் 2020, 10:15 am

DIN


திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சட்டதிட்ட விதி : 18, 19-ன்படி கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

அது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.இராசா, எம்.பி., துணைப் பொதுச்செயலாளராகவும் -  தங்க. தமிழ்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன் கழக சட்டதிட்ட விதி:18, 19-ன் படி,  திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Story image

தேனி வடக்கு - தேனி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேனி மாவட்டத்தை கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் - கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

தேனி தெற்கு மாவட்டம்
201. கம்பம்
198. ஆண்டிப்பட்டி

தேனி வடக்கு மாவட்டம்
200. போடிநாயக்கனூர்
199. பெரியகுளம் (தனி)

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் தேனி வடக்கு தேனி வடக்கு தேனி வடக்கு மற்றும் தேனி மற்றும் தேனி மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.

மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி தெற்கு தேனி தெற்குமாவட்டம்
பொறுப்பாளர் - கம்பம் என். இராமகிருஷ்ணன் 
15/40, ராமையா கவுண்டர் தெரு,
கம்பம் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்,
தேனி மாவட்டம்.
தேனி வடக்கு தேனி வடக்குமாவட்டம்

பொறுப்பாளர் - தங்க. தமிழ்ச்செல்வன் 
93/1, வடக்கு தண்ணீர் தொட்டி தெரு,
நாராயணதேவபட்டி அஞ்சல்,
உத்தமபாளையம் வட்டம்.
தேனி மாவட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.