எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காந்தி, காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்.
Updated On :2 அக்டோபர் 2020, 6:07 am

DIN

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனத சுட்டுரையில், அக்டோபர் 2 - உலக உத்தமர் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள்! 

அடிமை இந்தியாவில் சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத் தந்தை!

அவர் காண விரும்பிய சமத்துவ சமூகம் - சமூக நல்லிணக்க சமுதாயம் - அனைவருக்குமான நாடு ஆகியவற்றை அமைக்கப் போராடுவோம்!

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார். கிராமம் காக்க, வேளாண்மை செழிக்க, விவசாயி வாழ நம்மை நாமே அர்ப்பணிப்போம்!

வாழ்க எம்மான்!

அதேபோல், அக்டோபர் 2 - கர்ம வீரர், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்!

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவும், தமிழகம் உரிமையோடு திகழவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தனிப்பெரும் தலைவர் அவர். 

ஏழைகள் ஏற்றம் பெறவும் - எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவும் - உலகில் தமிழன் உயர்ந்து நிற்கவும் - பெருந்தலைவர் விரும்பினார். 

அவர் விருப்பத்தை நம் கடமையாகக் கொண்டு உழைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.