தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். 

News image
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் 
Updated On :2 அக்டோபர் 2020, 12:20 pm

DIN

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே இருவரும் மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் மருத்துவ சிகிச்சைக்கு தொடர் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.