தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திண்டிவனம் அருகே ரூ. 15 லட்சத்தை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கார் ஓட்டுனரை கட்டிப்போட்டுவிட்டு, ரூ. 15 லட்சத்தை திருடிக்கொண்டு, மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு

Updated On :9 அக்டோபர் 2020, 10:30 am

DIN

திண்டிவனம் அருகே வீட்டிலிருந்த கார் ஓட்டுனரை கட்டிப்போட்டுவிட்டு, ரூ. 15 லட்சத்தை திருடிக்கொண்டு, மர்ம நபர்கள் வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மகன் மணிகண்டன்(27). சென்னை குன்றத்தூரில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்தவிட்டதால், தனது தாய் ஜெயலட்சுமி (48) என்பவருடன் குன்றத்தூர் சென்று விட்டார்.  

இந்நிலையில், அண்மையில் ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் தனது சொந்த ஊரான நடுவனந்தலில் உள்ள கூரை வீட்டில் வெள்ளிக்கிழமை காலை தூங்கி கொண்டிருந்தபோது, அதிகாலை மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்து, தன் கை, கால், வாயினை கட்டி விட்டு, வீட்டில் வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது கூரை வீட்டையும் கொளுத்திவிட்டு சென்றுவிட்டனர் என கூறியுள்ளார்.

Story image

அருகில் இருந்தவர்கள் வந்து வீட்டின் வெளியே கட்டியிருந்த மணிகண்டனை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்து மற்றும் திருட்டு சம்பவம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் மணிகண்டனிடம் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன், வெள்ளிமேடுபேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.